தேர்ச்சி மட்டம் 1.1 வணிக எண்ணக்கரு
வணிகம்
இலாபத்தை பெறும் நோக்கில் நடாத்திச் செல்லப்படும், மனித தேவைகள், விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான பொருள்கள், சேவைகளை உற்பத்தி செய்தல், விநியோகித்தல், சந்தைப்படுத்தல் என்பவற்றுடன் இணைந்த அனைத்து நடவடிக்கைகளையும் வணிகம் எனப் பொதுவாக வரைவிலக்கணப்படுத்த முடியும்.
இலாப நோக்கமின்றி மனிதத் தேவைகள், விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக நடாத்திச் செல்லப்படுகின்ற வணிகங்களும் காணப்படுகின்றன.
இதற்கமைய வணிகம் என்பது மனித தேவைகள், விருப்பங்களை நிறைவு செய்வதற்காகவுள்ள எந்தவொரு பொருளாதார நடவடிக்கையும் ஆகும்.
தேவைகள்
தேவைகள் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய உடல், உள ரீதியாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய இயல்பூக்க நிலைமையாகும்.
உதாரணம் :
உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, தொடர்பாடல், போக்குவரத்து
தேவையின் பண்புகள்
- வாழ்வதற்கு கட்டாயமாக பூர்த்தி செய்யப்பட வேண்டியது.
- இயல்பாக எழக்கூடியது.
- சகலருக்கும் பொதுவானது.
- வரையறுக்கப்பட்டது.
- முதன்மையானது.
விருப்பம்
விருப்பங்கள் என்பது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் திருப்தியினை அதிகரித்துக் கொள்ளவும் மனிதனால் தெரிவு செய்யப்படும் பல்வேறு வடிவங்கள், விதங்கள், முறைகள் ஆகும்.
உதாரணம் :
உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் பல்வேறு முறைகளாவன சோறு, இடியப்பம், பிட்டு, தோசை, பிரியாணி போன்றன விருப்பங்களுக்குரிய உதாரணம் ஆகும்
விருப்பங்களின் பண்புகள்
- கட்டாயமாக பூர்த்தி செய்ய அவசியமற்றது.
- இயல்பாக எழாதவை ( தோற்றுவிக்கப்படக் கூடியவை )
- தனி நபருக்கு ஏற்ப வேறுபடும்.
- வரையறுக்கப்படாதவை.
- இரண்டாம் நிலைக்குரியவை.
தேவைகள், விருப்பங்களுக்கான உதாரணங்கள்
🗯️ உணவு : சோறு, இடியப்பம், பிட்டு, தோசை
🗯️ உடை : சட்டை, வேட்டி, சேலை,
🗯️வீடு : மாடிவீடு, குடிசை, விடுதி
🗯️கல்வி : அரச பாடசாலைக்கல்வி, தனியார் பாடசாலைக்கல்வி, புத்தகக்கல்வி
🗯️ போக்குவரத்து : பேருந்து , மோட்டார் வாகனம், சைக்கிள்
🗯️ தொடர்பாடல் : தொலபேசி, தொலைநகல், மின்னஞ்சல்
🗯️பாதுகாப்பு : பெற்றோர், இராணுவப்படை, பொலிஸ்படை,
உற்பத்தி
மனித தேவைகள், விருங்களை பூர்த்தி செய்வதற்காக சந்தைக்கு முன்வைகின்ற எந்தவொன்றும் உற்பத்தி ஆகும்.
வளத்தின் பண்பினை மாற்றி பெறுமதியை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடு உற்பத்தி ஆகும்.
பொருட்கள்
மனித தேவை, விருப்பங்களை பூர்த்தி செய்யும் கற்புலனாகக்கூடிய பௌதீக உருவம் உடைய தொட்டு உணரக்கூடிய எந்தவொன்றும் பொருட்கள் ஆகும்.
உதாரணம் : தளபாடம், பாதணி, வாகனம்
பொருட்களின் பண்புகள்
- கற்புலனாகக் கூடியவை .
- தொட்டுணரக் கூடியவை .
- வழங்கும் நபரையும் பொருளையும் பிரிக்க முடியும்.
- சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.( களஞ்சியப்படுத்தலாம் )
- பௌதீக ரீதியான உருவம் உடையது.
சேவைகள்
மனித தேவை, விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக ஒரு நபரால் இன்று மொறு நபருக்கு வழங்கப்படும் ஏதேனு மொறு செயற்பாடு சேவைகள் எனப்படும்.
உதாரணம்: மின்சாரம் , காப்புறுதி , வங்கி
சேவைகளின் பண்புகள்
- கற்புலனாகாதவை.
- தொட்டுணர முடியாதவை.
- வழங்கும் நபரையும் சேவையையும் பிரிக்கமுடியாது .
- களஞ்சியப்படுத்த முடியாது .
- பௌதீக ரீதியான உருவம் அற்றவை .
- உற்பத்தியும் நுகர்வும் ஒரே இடத்தில் நடை பெறும்.
சந்தை
கொள்வனவாளரும், விற்பனையாளரும் சந்திக்கின்ற / தொடர்புபடுகின்ற எந்த ஒரு நிலைமையும் சந்தை என அழைத்தப்படும் .
மனித தேவைகள் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக சந்தையின் ஊடாக பொருட்கள், சேவைகள் வழங்கப்படும்.
வணிகங்களில் காணப்படும் பண்புகள்
01. _விற்பனை அல்லது பரிமாற்றம் இடம்பெறல் ._
வணிக நடவடிக்கைகள் அனைத்தும் பொருட்கள், சேவைகளை பணரீதியான பெறுமானத்தின் அடிப்படையில் விற்பனை அல்லது பரிமாற்றம் இடம்பெறும் .
பொருள்கள் , சேவைகளை விலையின் அடிப்படையில் கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலும் இடம்பெறுவதானது வணிகங்களின் அத்தியவசியமான காரணியில் ஒன்றாகும் .
அவ்வாறு விற்பனை அல்லது பரிமாற்றம் இல்லாத போது வணிக நடவடிக்கைகள் இடம்பெறாது .
உதாரணமாக வீடொன்றில் குடும்பத்திற்காக உணவு தயாரித்தல் வணிகமொன்றாகக் கருதப்படுவதில்லை என்பதுடன் குறிப்பிட்ட விலையில் ஏனையோருக்கு விற்பனை செய்வதற்காக உணவு தயாரித்தல் , விற்பனை செய்தல் என்பன வணிகமாகக் கருதப்படும் .
_02. பொருள்கள் சேவைகளினதும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறல் ._
அனைத்து வணிகங்களும் ஏனையோர்களுக்கு விற்பனை செய்வதற்காக பொருள்கள் , சேவைகளை உற்பத்தி செய்தல் அல்லது கொள்வனவு செய்தலை மேற்கொள்கின்றன .
அவை நுகர்வுப் பொருள்களாக அல்லது கைத்தொழில் ( வணிகம் ) பொருள்களாக இருக்க முடியும் .
இறுதிப் பயன்பாட்டிற்காக நுகர்வோன் கொள்வனவு செய்யும் பாண் , ஆடை , பாதணிகள் என்பன நுகர்வுப் பொருள்களாகும் எனும் பொருள்படும் .
கைத்தொழில் பொருள்கள் / வணிகப் பொருள்கள் என்பது நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் , இயந்திரங்கள் என்பவைகளாகும் .
_03. கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ச்சியாக இடம்பெறல் ._
தொடர்ச்சியான அடிப்படையில் பொருள்கள் , சேவைகளின் கொடுக்கல் , வாங்கல்கள் இடம்பெறுமாயின் அதனை வணிகம் எனக் குறிப்பிடலாம் .
ஒரு கொடுக்கல் வாங்கல் மாத்திரம் மேற்கொள்ளப்படுமாயின் அது வணிகமல்ல . உதாரணமாக தனிநபரொருவர் தான் பயன்படுத்திய பழைய மோட்டார் சைக்கிளை விற்பனை செய்தல் வணிகமல்ல .
எனினும் அவர் தொடர்ச்சியான ஒரு அடிப்படையில் மோட்டார் சைக்கிள் விற்பனையினை மேற்கொள்வாறாயின் அது வணிகமாகக் கருதப்படும் .
_04. இலாபத்தினால் / நட்டத்தினால் ஊக்கப்படுத்தப்படல் ._
வணிகமொன்றின் அடிப்படை நோக்கம் பணம் உழைப்பதும் செல்வம் சேர்ப்பது மாகும் .
இதற்கமைய வணிகமொன்று ரூபா சதங்களினால் பெறப்படும் இலாபம் செலவை விடக்கூடிய வருமானம் , வணிகக் கருமங்களைக் கட்டியெழுப்புதல் , வணிக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல் , சமூக நலன்களைப் பெற்றுக் கொடுத்தல் என்பன உள்ளடங்கும் .
இதனடிப்படையில் வணிகத்துறையில் இலாபத்தை நோக்காகக் கொண்டிருப்பதைப் போன்றே இலாபத்தை நோக்காகக் கொள்ளப்படாத ஆயினும் மேலே குறிப்பிடப்பட்டவாறு அனுகூலங்களை நோக்காகக் கொண்ட வணிகங்களும் காணப்படுகின்றன .
எனவே வணிக மொன்றின் விருத்திக்கும் விரிவாக்கத்திற்கும் இலாபம் அவசியமானதாக இருக்கின்றது .
_05. இடரொன்று காணப்படல் ._
இலாபத்தைப் பெறுவதற்காகக் காணப்படுகின்ற நிச்சயமற்ற தன்மை , நட்டம் ஏற்படக்கூடிய நிலைமை போன்றவற்றுக்கு வணிகங்கள் முகங் கொடுக்க வேண்டி ஏற்படும் .
எதிர்காலம் நிச்சயமற்றிருத்தல் , வணிகச் சூழலில் ஏற்படும் மாற்றம், இலாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பின்வரும் விடயங்கள் வணிகங்களினால் நடைமுறையில் கட்டுப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களினால் இடர் அல்லது நிச்சயமற்ற தன்மை உருவாகும் .
🔸 நுகர்வோனின் சுவை , வடிவம் , கேள்வி என்பவற்றில் ஏற்படும் மாற்றங்கள் .
🔸 இயந்திரங்கள் , உபகரணங்கள் , உற்பத்தித் தொழினுட்பம் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்கள் .
🔸 சந்தையின் போட்டித்தன்மை அதிகரித்தல் .
🔸 மூலப்பொருள்கள் பற்றாக்குறை , மின்சாரம் தடைப்படல் , எரிபொருள் பற்றாக்குறை என்பன ஏற்படுதல் .
🔸 பணியாளர்களின் பிரச்சினைகள் , வேலைநிறுத்தம் போன்றவை காரணமாக.
🔸 தீப்பிடித்தல் , கள்வர் பகைவர் இடையூறுகள் , விபத்துக்கள் போன்ற அழிவுகள் காரணமாக.
🔸 வணிகத்தின் வளப்பாவனை தொடர்பிலான முகாமையின் பிழையான தீர்மானம் .
வணிகங்கள் அடிக்கடி இடர்களுக்கு முகங் கொடுக்கின்றன . இவ்வாறான இடர்கள் காணப்படுவது வணிகமொன்றின் பண்பொன்றாகும் .
_06.விருப்பங்களைத் தோற்றுவித்தல்_ .
மனித விருப்பங்களை நிறைவு செய்வதற்காகப் பொருள்களை உற்பத்தி செய்வதில் வணிகங்கள் ஈடுபடுகின்றன .
சில வணிகங்கள் மூலப்பொருள்களை முடிவுப்பொருளாக மாற்றுவதன் மூலம் மனித விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றன .
வேறு சில வணிகங்கள் சிலவகைப் பொருள்கள் கூடுதலாகக் காணப்படும் பிரதேசத்திலிருந்து அப்பொருள்களைக் கூடுதலான கேள்வி காணப்படும் பிறிதோர் இடத்திற்குக் கொண்டு செல்வதன் மூலம் மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன .
இன்னும் சில வணிகங்கள் சிலவகைப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் விநியோகிப்பதற்காக அப்பொருள்களின் அறுவடைக் காலங்களில் அவற்றைச் சேகரித்துக் களஞ்சியப் படுத்தி வைப்பதன் மூலம் மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன .
இவ்வாறு சகல வணிகங்களும் பொருள்களை உற்பத்தி செய்தல் சேவைகளை வழங்கல் என்பவற்றினூடாக மனித விருப்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன .
_07. பொருளாதாரக் கருமமொன்றாக இருத்தல்_ .
அருமையாகக் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி பொருள்கள் , சேவைகளை உற்பத்தி செய்தல் , விநியோகித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாக வணிகம் பிரதானமான பொருளாதாரக் கரும் மொன்றாகக் கருதப்படும் .
இது பணத்தைச் உழைக்கும் நோக்கத்தில் இடம் பெறுவதொன்றாகும் .
வணிகங்கள் , பொருள்கள் , சேவைகளை விற்பனை செய்தல் , அருமையான வளங்களைப் பயன்படுத்துதல் போன்ற கருமங்களில் ஈடுபடுவதனால் இது பொருளாதார நடவடிக்கையொன்றாகக் கருதப்படும் .
*வணிகமொன்றின் பிரதான கருமங்கள்*
💭 மனிதத் தேவை விருப்பங்களை நிறைவு செய்தல் .
💭 வளங்களுக்குப் பெறுமதி சேர்த்தல் .
பொருளொன்றை அல்லது சேவையொன்றை உற்பத்தி செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகின்ற வளங்களின் தன்மையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஏற்படுகின்ற பெறுமதி அதிகரிப்பு *பிணைச் சேர்க்கப்பட்ட பெறுமதி* என்றழைக்கப்படும் .
வணிகங்கள் வளங்களின் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக அவ்வளங்களின் பெறுமதி அதிகரிக்கும் . இவ்வாறு வளங்களுக்குப் பெறுமதியினைச் சேர்த்தல் வணிக மொன்றில் இடம்பெறும் முக்கியமான கருமமொன்றாகும் .
வணிகங்களுக்குப் பல்வேறு நோக்கங்கள் காணப்பட முடியும் அவற்றில் சில 👇🏻
*_வணிகங்களின் நோக்கங்கள்_*
- சந்தையில் நிலைத்திருத்தல்.
- இலாபத்தை உச்சப்படுத்தல்.
- விற்பனையை உச்சப்படுத்தல்.
- சந்தைப் பங்கை அதிகரிக்கச் செய்தல்.
- நுகர்வோரின் விருப்பத்தை உச்சப்படுத்தல்.
- பங்குகளின் சந்தைப் பெறுமானத்தை உச்சப்படுத்தல்.
- வணிகரின் தனிப்பட்ட திருப்தி.
- சமூகத்தினதும் மக்களினதும் நலன்.
- ஊழியர் நலனோம்புகள்.
*_பொருளாதார வாழ்தன்மைக்கும் வணிகங்கள் பங்களிப்பு_*
🔸 மாற்றமடையும் சிக்கலான தேவைகளை நிறைவு செய்தல்.
🔸 புத்துருவாக்கம்.
🔸 தொழில் உருவாக்கம்.
🔸 தேசிய பொருளாதார விருத்தி.
...•...
°°°R. N. F Rashidha °°°
