தேர்ச்சி மட்டம் 1.3
வணிகங்களை வகைப்படுத்தல்
வணிகங்களை சில நியதிகளின் அடிப்படையில் 5 வகைப்படுத்தலாம்.
அவை பின்வருமாறு,
1.உற்பத்தியின் தன்மை அடிப்படையில்
2.உரிமையின் அடிப்படையில்
3.நோக்கத்தின் அடிப்படையில்
4.பருமனின் அடிப்படையில்
5.உற்பத்தி துறையின் அடிப்படையில்
இவற்றின் அடிப்படையிலேயே வணிகமானது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் உற்பத்தியின் தன்மைக்கேற்ப வணிகத்தை 1ம் நிலை, 2ம் நிலை, 3ம் நிலை என வகைப்படுத்தி காட்டலாம்.
முதலாம் நிலை வணிகம்
இயற்கையின் அருங்கொடைகளாக கிடைக்கப்பெறும் வளங்களை எவ்வித மாற்றமும் இன்றி அம்முறையிலேயே பயன்பாட்டுக்கு உட்படுத்தும் உற்பத்தி வணிகம் முதல் நிலை வணிகம் ஆகும்.
அவ்வாறான முதலாம் நிலை உற்பத்திக்கு உதாரணமாக விவசாயம், கால்நடை, மீன்பிடி கைத்தொழில், சுரங்க மறுத்தல், கைத்தொழில் அகழ்வு போன்றவற்றை குறிப்பிடலாம்.
இரண்டாம் நிலை வணிகம்
முதல்நிலை வணிகத்தை மீளமாற்றம் செய்து பயன்படுத்துகின்ற வணிகம் இரண்டாம் நிலை வணிகம் ஆகும்.
அந்த வகையில் இரண்டாம் நிலை வணிகத்திற்கு உற்பத்தி கைத்தொழில், நிர்மாண கைத்தொழில் போன்றவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம்.
மூன்றாம் நிலை வணிகம்
அனைத்து வகையான சேவை வழங்கும் வணிகங்களும் மூன்றாம் நிலை வணிகம் ஆகும்.
அன்றாட வாழ்வில் எமக்கு கிடைக்கப்பெறும் வணிகங்களால் வழங்கப்படுகின்ற,
- மின்சாரம், வாயு, வெப்பம் மற்றும் குளிரூட்டல் வழங்கல்.
- நீர் சுத்திகரிப்பும், வியாபாரம் விநியோகமும்.
- தகவல் தொடர்பாடல் நடவடிக்கைகள்.
- வியாபாரம், போக்குவரத்து சேவை, விடுதி வசதி வழங்கல், உணவு குடிபானம் வழங்கல்.
- தொழில் சார் சேவைகள் மற்றும் ஏனைய தனியார் சேவைகள்.
- அரச நிர்வாகம், தேசிய பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு சேவை.
போன்ற அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை வணிகத்திற்கு உதாரணங்களாகும்.
அடுத்ததாக உரிமையின் அடிப்படையில் வணிகமானது,
- தனியார் துறை
- பொதுத்துறை
என இரண்டு வகைப்படுத்தப்படுகின்றது.
நோக்கத்தின்
அடிப்படையில் இலாப நோக்கம் மற்றும் இலாப நோக்கமற்றது என இரு வகைப்படுத்தலாம்.
பருமனின் அடிப்படையில் வணிகம் இரண்டு வகைப்படும்.
அவையான,
- சிறிய, நடுத்தர அளவு வணிகம்
- பாரியளவு வணிகம் என்பனவாகும்.
இறுதியாக உற்பத்தி துறையின் அடிப்படையில் வணிகத்தை மூன்று வகை படுத்த முடியும். அவையாவன,
- விவசாயம்
- கைத்தொழில்
- சேவை என்பனவாகும்.
உற்பத்தியின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தும் போது சுரங்க மறுத்தலும், அகழ்வும் முதலாம் நிலைக்கு உரித்தாவதுடன் உற்பத்தி துறை அடிப்படையில் வகைப்படுத்தும் போது சுரங்க மறுத்தலும், அகழ்வும் கைத்தொழில் துறைக்கு உரித்துடையதாகும்.
அத்துடன் உற்பத்தியின் தன்மைக்கேற்ப மின்சாரம், வாயு, குளிரூட்டல், நீர் சுத்திகரிப்பும், விநியோகமும் போன்றன மூன்றாம் நிலைக்குரியதாயினும் உற்பத்தி துறைக்கேற்ப அவை கைத்தொழில் துறைக்குரியதாகும்.
இதற்கமைய வகைப்படுத்தும் அடிப்படைக்கேற்ப வணிகங்கள் உள்ளடங்கும் பிரிவுகள் வித்தியாசப்படும்.
·· • ··
-N.Naveena Tharuni.-
