.4 வணிக உள்ளீடு, வெளியீடு செயன்முறைகள்


 _1.4 வணிக உள்ளீடு, வெளியீடு  செயன்முறைகள்_

 உள்ளீடுகள்

வணிக கருமங்களுக்கு நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சியான்மை,தகவல், காலம், அறிவு போன்ற உள்ளீடுகள் பயன்படுத்தபடுகின்றன.

உதாரணமாக தைக்கப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்யும் போது நிறுவனமொன்றை  நோக்குதல்.

01. நிலம்: 

•கட்டடம் அமைந்துள்ள காணி

•கட்டடத்திற்கு கிடைக்கும் காற்றோட்டம்

•சூரிய ஒளி (இயற் கையான வெளிச்சம்)

02. உழைப்பு: 

•ஆடை தைப்பவரின் உடல், உள ரீதியான உழைப்பு

• மேற்பார்வையில் உடல், உள ரீதியான உழைப்பு

•முகாமையாளர்களின் உள ரீதியான  உழைப்பு

•காவலாளிகளின் உழைப்பு

03. மூலதனம்: 

•கட்டடம்

•தையல் இயந்திரம், உபகரணங்கள்

•விநியோக மோட்டார் வாகனம்

•துணி, நூல், பொ த்தான்

•காசு

04. முயற்சியாண்மை: 

• வளங்களின் கலவை தொடர்பில் தீர்மானமெடுப்பவர் (இலாபத்தை அனுபவிப்பவர்)

•இடர்கள் ஏற்று தீர்மானிப்பவர்

•நபர்கள் அல்லது நிறுவனம்

05. தகவல்கள்: 

• நுகர்வோரின் சுவைமாற்றத்திற்கு பொருத்தமான வடிவமைப்பு

•மூலப்பொருள் தொடர்பிலான புதிய தகவல்கள்

•புதிய தொழினுட்பம் தொடர்பிலான தகவல்கள்

•சந்தை தொடர்பான தகவல்கள்

06. காலம்: 

•ஊழியர்கள் சேவையில் ஈடுபடும் காலம்

•இயந்திரத்தை சேவையில் ஈடுபடுத்தும் காலம்

•தீர்மானமெ டுப்பதற்கு செலவிடப்படும் காலம்

07. அறிவு: 

• புதிய வெளியீடு தொடர்பில் கிடைக்கப்பெறும் ஆக்க உரிமை பத்திரத்தை பெற்றுக்கொள்ளல்

•ஆடை உற்பத்தி நிறுவன  ஊழியர்களின் திறன்

•முகாமையாள ரிடமுள்ள அறிவு

•வடிவமைப்பை உருவாக்கும் நுட்பவியலாளரின் அறிவு

•சட்ட ஆலோசனைகள்


.........S.Nivya..........


Post a Comment

Previous Post Next Post